For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்- சிறையில் அடைப்பு!

Google Oneindia Tamil News

Nithyanantha
ராம்நகர்: கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.

ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்களால் கன்னட சுவர்ணா டிவி செய்தியாளர் அஜீத் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கன்னட நவநிர்மான் சேனே அமைப்பினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலும் பலர் கைதானார்கள். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை ராம்நகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது ஆசிரமும் தற்போது அரசின் கைகுக்குப் போய் விட்டது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு செய்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க கோர்ட் இன்று மறுத்து விட்டது. இதையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராம்நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா சரணடைந்துள்ளார்.

சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ராம்நகர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

English summary
Sources from Ramanga in Karnataka say that absconding Nithyanantha has surrendered before district magistrate court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X