For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அரசு வழக்கறிஞர் பிரீத் பஹாரா

By Mathi
Google Oneindia Tamil News

Preet Bharara
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் பங்குச் சந்தையின் உள்பேர மோசடி வழக்கில் இந்தியரான ரஜத் குப்தா பெயர் மட்டும் அடிபடவில்லை...அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த மற்றொரு இந்தியரான பிரீத் பஹாராவும்தான் பேசப்படுகிற நபராக இருக்கிறார்..

ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற போது தென் நியூயார்க் மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் பஹாரா. பங்குச் சந்தையில் உள்பேர மோசடி மோசடியை அரங்கேற்றியதற்காக சிறைத் தண்டனை பெற்றுள்ள இலங்கைத் தமிழர் ராஜரத்தினத்தின் நண்பர்தான் ரஜத் குபா. டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவரும் மெக்கென்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமானவர் ரஜத் குப்தா.

பிரீத் பஹாரா, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் பிறந்தவர். நியூயார்க் மாவட்ட அரசு வழக்கறிஞராக பஹாரா பொறுப்பேற்ற பிறகு வர்த்தகம் சார்ந்த மோசடிகளுக்கு மட்டுமல்ல.. திட்டமிடப்பட்ட பல்வேறு சதிச் செயல்களிலும் கூட தண்டனை பெற்றுத் தந்திருக்கிறார் பஹாரா.

2010-ம் ஆண்டு நியூயார்க்கின் சுதந்திர சதுக்கத்தில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்து இருக்கிறார் பஹாரா. இதேபோல் கென்யா மற்றும் தான்சானியா தூதரகங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமான அல்குவைதா சதிகாரர் அகமது கல்பானின் தொடர்பையும் நிரூபித்து ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தார்.

இதேபோல்தான் பங்குச் சந்தையின் உள்பேர மோசடி வழக்கில் ராஜரத்தினத்துக்கு உதவியாக இருந்த ரஜத் குப்தாவின் குற்றத்தை சில நாட்களுக்கு முன்பு பஹாரா நிரூபித்திருந்தார். அவருக்கு அக்டோபர்மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அனேகமாக ரஜத் குப்தாவுக்கு 25 ஆண்டு தண்டனை கிடைக்கலாம்.

பஹாராவை உலகின் செல்வாக்குமி க்க 100 மனிதர்களில் ஒருவராக சுட்டிக்காட்டியுள்ளது. பஹாராவைப் போல்தான் இந்தியாவின் உஜ்வால் நிகாம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு, பிரமோத் மகாஜன் மற்றும் மும்பை தாக்குதல் வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர். இவர்கள் இருவருமே சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்தவர்கள். இவர்களைப் போல் சட்ட வல்லுநர்கள் உருவாக வேண்டியது அவசியம்.

English summary
Two Indian Americans were at the centre of the just-concluded insider trading trial in the United States. Still IIT Delhi alumnus and former McKinsey chief executive Rajat Gupta may well be ruing the fact that Preet Bharara, US attorney for the Southern District of New York, was the one gunning for him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X