For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் டாக்சி ஓட்டுநர்களை குறிவைத்து தாக்குதல்: பெண் உட்பட 8 இளைஞர்கள் கைது

By Mathi
Google Oneindia Tamil News

மெல்பேர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்சி ஓட்டுநர் உட்பட பல டாக்சி ஓட்டுநர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களே. இவர்கள் மீது ஆயுத முனையில் வழிப்பறியில் ஈடுபட்டது, வழிப்பறிக்காக தாக்குதல் நடத்தியது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவர் மீதான வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் நடத்த்டப்பட உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரத்தில் ஐந்து டாக்சி ஓட்டுநர்களை தாக்கி இந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது. இவர்களின் தாக்குதலில் இந்தியரான ஹர்பீத் கில்லும் சிக்கியிருந்தார். அவரது முகத்தில் தாக்கிய இந்த கும்பல் அவரிடம் கையில் இருந்த 150 ஆஸ்திரேலிய டாலர்களையும் கை பேசியையும் பறித்துச் சென்றது.

English summary
Australian police on Tuesday arrested eight teenagers in connection with a spate of violent armed robberies targeting taxi drivers, including an Indian cabbie, in Melbourne’s western suburbs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X