For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நில அபகரிப்பு புகார்: ஏடிஜிபி துக்கையாண்டி ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் சஸ்பெண்ட்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நில அபகரிப்பு புகாருக்குள்ளான தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி. கே.துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அவர் இன்று ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்தவர் ஏ.டி.ஜி.பி. கே.துக்கையாண்டி. இவர் மனைவி சுப்புலட்சுமி. மகள்கள் யுவா ரிச்சர்ட், யாமினி ஆகியோர் மீது சென்னை பெருநகர காவல்துறையின் குற்றப் பிரிவு போலீசார் நில மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் துக்கையாண்டியின் குடும்பத்தினர் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், அவரது அதிகாரத்தையும், பதவியையும் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்ற அடிப்படையில் துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் ஆர். ராஜகோபால் உத்தரவிட்டார். அவர் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள்கள் மீதான புகாராகும்.

English summary
A senior police officer of the Tamil Nadu police was suspended, even as an inquiry into certain allegations against him was pending
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X