செங்கல்பட்டு முகாமிலிருந்து 4 பேரை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற முடிவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 4 பேர் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அகதிகள் தடுப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் 30 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது ஆயுதம் கடத்தல், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கி இருத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக சிறப்பு முகாமில் இருக்கும் இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனை கண்டித்து 9 பேர் கடந்த 15 ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் 9 பலரது உடல் நிலை மோசமடைந்தது. அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருததுவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்தோரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் முகாமில் உள்ள சிவக்குமார், லோகநாதன், கமலாசரண், தனுசன் ஆகிய 4 பேரை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற கியூ பிராஞ்ச் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அந்த 4 பேரையும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications