For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ. நெடுமாறன் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் திமுக தலைவர் கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழீழம் உருவாவதை விரைவில் காண வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காகத்தான் டெசோ மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்து 40 நாள்கள் ஆவதற்குள் அவர் பேச்சில் பொங்கி வந்த கோபம் மறைந்துவிட்டது. டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று இப்போது கூறியுள்ளார்.

மத்திய அரசின் ஓர் அங்கமாக விளங்கும் திமுக செய்ய வேண்டியதைச் செய்து ஈழத் தமிழர்களின் துயரைத் துடைக்காமல் இப்போது முச்சந்தியில் மாநாடு நடத்தி துயரைத் துடைக்கப் போவதாகக் கூறுவது பித்தலாட்டம். கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவி்ததுள்ளார்.

இது குறித்து தமிழருவி மணியின் வெளியிட்ட அறிக்கை:

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒருபோதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத் தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளார் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamilar Desiya Iyakkam leader Pazha. Nedumaran condemned DMK Karunanidhi for playing double game in Lankan tamils issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X