For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 மணி நேரம் தாமதமாக எப்.ஐ.ஆர். தாக்கல்- 4 பேரின் தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் முன் விரோதம் காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு உறவினர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாண்டியராஜன் உறவினர்கள் ராமச்சந்திரன், ராஜேஸ்வரன், பாண்டி, சிவசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராமசந்திரன், ராஜேஸ்வரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பாண்டியனுக்கு 10 ஆண்டும், சிவசாமிக்கு 3 ஆண்டும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று 4 பேரையும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால்தான் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதாவது ண்டியராஜன் கொலையை பொறுத்த வரையில் காவல் நிலையத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் சுமா 6 மணி நேரத்துக்கு பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது என்று நம்ப முடியாது. இதனால் இந்த 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து ச்ய்துவிட்டது.

English summary
An unexplained delay in an FIR reaching a court, just a stone's throw away, has cost the prosecution dear with the Madras High Court setting aside convictions of four persons in a murder case. Allowing appeals by the four, sentenced from between three years rigorous imprisonment to life, a division bench, comprising Justices K N Basha and P Devadass set aside their convictions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X