For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2வது முறையாக துணை ஜனாதிபதியான பன்முக திறமை கொண்ட ஹமீத் அன்சாரி!

By Mathi
Google Oneindia Tamil News

Hamid ansari
டெல்லி: நாட்டின் குடியரசு துணைத் தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி சிறந்த கல்வியாளராக- எழுத்தாளராக பன்முகத் திறமை கொண்டவர்..

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர்தான் சொந்த ஊர். ஆனால் இவர் பிறந்தது கொல்கத்தாவில். 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பிறந்த ஹன்சாரியின் மாமா முக்தார் அகமத் அன்சாரி காங்கிரஸ் கட்சியில் 1927-ம் ஆண்டு தலைவராக இருந்தார்.

1961ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அன்சாரி. ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார் அன்சாரி.

1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்..மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியாமில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் அன்சாரி.

மேற்காசிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுடைய அன்சாரி, பாலஸ்தீனம் உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அதன் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, பின், வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவையைக் கால வரையின்றி ஒத்திவைத்தார் அன்சாரி. இதற்காகத்தான் ஹமீத் அன்சாரியை மீண்டும் குடியரசு துணைத் தலைவராக்கியிருப்பதாக கூறப்படுவதும் உண்டு.

கடந்த 2007-ம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலின் போது மொத்தம் 455 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவைவிட 233 வாக்குகள் வித்தியாசதில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றார்.

English summary
Vice President Hamid Ansari Ansari first time became Vice-President in 2007 after defeating NDA nominee Najma Heptullah. He has earlier served as India's permanent representative to the UN, high commissioner to Australia, and ambassador to the UAE, Iran, Afghanistan and Saudi Arabia. A Padma Shri awardee, he was also vice-chancellor of Aligarh Muslim University and chairperson of National Commission for Minorities.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X