For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் உணவு, தண்ணீர் இன்றி 27 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகள்

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதிகளாக செல்ல முயன்ற 19 ஈழத் தமிழர்களும் 11 சிங்களரும் நடுக்கடலில் 27 நாட்களாக தத்தளித்திருக்கின்றனர்.

இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொசி, வவுனியா, மன்னார், சிலாபம் மற்றும் நீர்க் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 17-ந் தேதி படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்டனர். ஆனால் படகு புறப்பட்ட 5-வது நாளில் படகின் புரபொல்லர் உடைந்து போனது. இதனால் நடுக்கடலில் அனைவரும் தத்தளித்தபடி காத்திருந்தனர். இது 27 நாட்களாக நீடித்திருக்கிறது. பின்னர் மீன்பிடி படகுகளில் சென்றோர் உதவியுடன் இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் தென்கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த படகை இலங்கை கடற்படை கைப்பற்றி கரைக்கு கொண்டு சேர்த்தனர்.

படகில் இருந்த அனைவரும் 27 நாட்கள் பசி மற்றும் தாகத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களுக்கான உணவு தேவைகளை நிறைவேற்றியதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

இதனிடையே இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி செல்ல முயன்ற 52 தமிழர்கள் மற்றும் 5 சிங்களவரை கொண்ட மற்றொரு படகையும் இலங்கை கடற்படை நேற்று முன்தினம் வழிமறித்து கரைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Sri Lanka Navy rescued 30 persons, who were illegally heading for Australia, while stranded in the deep seas. They were safely brought to the Tangalle Harbour on 17th August 2012, having rescued from a month-long drifting ordeal at deep sea. Among the rescued are 19 Tamils and 11 Sinhalese. All are males resident in Jaffna, Kilinochchi, Vavuniya, Mannar, Chilaw and Negombo.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X