For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழக்கம்போல ஆடு, கோழி பலியிடல் நடைபெறும்: இலங்கை முன்னேஸ்வரம் இந்து ஆலய நிர்வாகம் அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சிலாபம்: இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வழக்கம்போல இந்த ஆண்டும் ஆடு,கோழி பலியிடும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

ஆடு,கோழி பலியிடுவதற்கு சிங்கள ரவுடி அமைச்சர் மேர்வின் சில்வா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பெளத்த பிக்குகள் கோயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோயில் நிர்வாகத்தினர், எதிர்ப்புக்களோ அல்லது தடைகளோ ஏற்படுத்தப்பட்ட போதிலும் சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலின் பூஜை திட்டமிட்டபடி வரும் சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும், சிலரின் எதிர்ப்புக்களுக்காக எமது சமய விவகாரங்களை நாங்கள் கைவிடமாட்டோம் என்றும் கோயில் நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

English summary
The Kali-Kovil in Munneswaram, Sril Lanka is to go ahead with a pooja to sacrifice animals despite fresh protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X