For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ், சிகரெட்டை விட மோசமானதாம் பேஸ்புக்...!

Google Oneindia Tamil News

Checking Facebook or Twitter is more tempting than sex
சிகாகோ: செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட படு மோசமானதாக மாறியிருக்கிறது பேஸ்புக், டிவிட்டரைப் பார்க்கும் பழக்கம் என்று கூறுகிறது ஒரு ஆய்வு.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்தது.

ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.

செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம் தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம். செக்ஸுக்காக கூட இப்படி மெனக்கெடுவதில்லையாம்.

இன்னும் படுக்கை அறையில் பக்கத்தில் மனைவியோ அல்லது காதலியோ இருந்தால் கூட அப்போது கூட பேஸ்புக் அல்லது டிவிட்டர் பற்றி நினைக்கிறார்களாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்து்த் தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.

English summary
Checking social networking sites is more tempting than sex and cigarettes, a study has revealed. Researchers at Chicago University's Booth Business School used BlackBerrys to log reports about participants' willpower and desires over seven days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X