For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்- எகிப்து முயற்சியால் போர் நிறுத்தம்

By Mathi
Google Oneindia Tamil News

Gaza
காசா: ஒருவார காலமாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல்- ஹாமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் கொடுந்தாக்குதலை ஒருவாரத்துக்கும் மேலாக நடத்தி வந்தது. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 160 பேர் கொல்லபப்ட்டனர். இந்நிலையில் இருதரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள எகிப்து நாடு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது கமல், இருதரப்பு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவகலமும் அறிவித்திருக்கிறது. போர் நிறுத்தம் தொடர ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குத்லை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

English summary
Israel and Palestinian militant groups in the Gaza Strip have reached a cease- fire agreement to end eight days of fighting, Egyptian Foreign Minister Mohamed Kamel Amr announced in the Egyptian capital of Cairo on Wednesday afternoon.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X