For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் எழுச்சியோடு நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள்

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் விதமாக இங்கிலாந்தின் லண்டன் உள்ளிட்ட இடங்களில் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

லண்டனின் மத்திய பகுதியில் கிங்ஸ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை தமிழ் இளையோர் அமைப்பு நடத்தியது. மாவீரர் நாளையொட்டி பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இங்கிலாந்தின் லிபரல் கட்சி எம்.பி. உரையாற்றினார். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழீழ தேசியக் கொடி, கொடிவணக்கப் பாடலுடன் ஏற்றப்பட்டது. பின்னர் அகவணக்கமும் மலர்வணக்கமும் நடைபெற்றது. "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய" எனும் மாவீரர் பாடலுடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

லண்டனுக்கு வெளியேயுள்ள பல பல்கலைக் கழகங்களை இணைத்து லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் (university of leicester) இளையோர்களால் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது, இதில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட ஆவணப்படமும் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய லெஸ்டர் பல்கலைக்கழக மாணவி, லண்டன், பாரிஸ், ஜெர்மன், கனடா எமது நாடுகள் அல்ல எமது நாடு எங்கோ ஒரு இடத்தில இருக்கிறது.அதன் பெயர் தமிழீழம். அதனை நாம் அடைய வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்

இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவேறியது.

English summary
Britain Tamil youths observed Maveerar Day in london.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X