For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமருடன் பாக். உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் சந்திப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்.

மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கும் ரஹ்மான் மாலிக் நேற்று உள்துறை அமைச்சர் சுஷில்குமா ஷிண்டேவை சந்தித்துப் பேசினார். தீவிரவாத பிரச்சனை, எல்லை விவகாரம், கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் போன்றவை குறித்து இருவரும் விவாதித்தனர்.

இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசிய ரஹ்மான் மாலிக், மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சையத் ஒப்படைப்பு பற்றியும் குஜராத்தின் சர்ச்சைக்குரிய சர் கிரீக் விவகாரம் குறித்தும் விவாதித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் ரஹ்மான் மாலிக் சந்தித்துப் பேசுகிறார்.

தமது இந்திய பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க ரஹ்மான் மாலிக் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது விருப்பத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது

English summary
Pakistan's Interior Minister Rehman Malik met Prime Minister Manmohan Singh at the latter's official 7, Race Course Road (RCR) residence here on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X