For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Cat
ரியோ- டி- ஜெனிரோ: தமிழ்நாட்டில் உள்ள சிறை வளாகத்திற்குள் செருப்பு, தலைமுடி, வடை ஆகியவற்றிற்குள் செல்போன், சிகரெட், கஞ்சா, கத்தி போன்றவைகளை கடத்துவார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் பூனை ஒன்று கத்தி, செல்போனை சிறைக்குள் கொண்டு சென்றதற்காக கைதாகியுள்ளது.

அலகோஸ் நகரில் உள்ள அராபிராகா சிறை பலத்த பாதுகாப்பு கொண்டது. இங்கு 263 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு அன்று வெள்ளை சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று பிரதான நுழைவு வாயில் வழியாக பம்மி பம்மி 'கேட் வாக்' செய்து சிறைக்குள் புகுந்தது. இது பூனைதானே என்பதால் போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அந்த பூனை வித்தியாசமாக இருந்ததோடு மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்த ஒரு காவலாளி அதன் அருகில் போய் அதை தூக்கிப் பார்த்தார்.

அப்போது பூனையின் உடலில் வால் பகுதிக்குக் கீழே டேப் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி டேப்பை கழற்றிய போது, பூனை உடலில் சுவரை துளை போடும் டிரில், மெமரி கார்டு, ஆக்ஸா பிளேடு, செல்போன், பேட்டரிகள் இருந்தன. இதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவற்றை கைப்பற்றினர். பொருட்களை சிறைக்குள் கடத்தி வந்த பூனையை கூண்டுக்குள் அடைத்தனர். பின்னர் விலங்குகள் நோய் தடுப்பு மையத்துக்கு அனுப்பினர்.

பூனையிடம் செல்போன் உள்பட பொருட்களை வைத்து பூனையை சிறைக்குள் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
A cat, busted in a Brazilian prison with saws and drills strapped to his body, has used its right to remain silent regarding details about a planned prison break.Inventive convicts in Alagoas jail in north eastern Brazil trained a friendly feline to deliver mobile phones and tools apparently needed for tunnelling strapped to its body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X