For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர்: - அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது வி.ஹெச்.பி!

By Mathi
Google Oneindia Tamil News

VHP Flag
அலகாபாத்: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்த இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அதிகாரப்பூர்வமான தமது ஆதரவை விரைவில் அறிவிக்க முடிவு செய்துள்ளது.

குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியில் முதலில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் இது விவாதப் பொருளானது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கடந்த வாரம் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மோடிக்கு ஆதரவு என்றே இந்துத்துவா அமைப்புகள் கூறிவருகின்றன. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட வேண்டும் என்று வி.ஹெச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் நேற்று முன் தினம் கருத்து தெரிவித்திருந்தார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தயக்கம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்து சாதுக்களின் அமைப்பான அகாடாக்களுடனும் இந்துத்துவா அரசியல் கட்சிகள் அலகாபாத் கும்பமேளாவில் இன்று ஆலோசனை நடத்துகின்றன. மேலும் விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இதில் பாஜகவின் தலைவர் ராஜ்நாத்சிங்கும் கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டின் முடிவில் பிரதமர் வேட்பாளாராக மோடியை நிறுத்துவதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஷ்வ ஹிந்து பரிசத் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

English summary
The Vishwa Hindu Parishad's (VHP) steering committee is meeting for the next two days in Uttar Pradesh's Allahabad. All eyes are on the Hindu outfit as it is likely to openly support Narendra Modi's name as the BJP's prime ministerial candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X