For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர்களுக்கு உதவிய ராகுல் காந்தி, வீரப்ப மொய்லிக்கு நன்றி: ஞானதேசிகன்

Google Oneindia Tamil News

Gnanadesikan
சென்னை: மீனவர்களுக்கு மீண்டும் சில்லறை வர்த்தகத்தில் விற்கப்படுகிற விலைக்கே டீசல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மீனவர்களை மொத்த பயனீட்டாளர்கள் பிரிவில் சேர்த்ததன் மூலம் அவர்கள் லிட்டருக்கு ரூ. 63.71 விலையில் டீசல் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை மாற்றி மீனவர்களுக்கு சில்லறை வர்த்தக விலையான ரூ. 53.71-க்கு டீசல் வழங்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவர் உடனடியாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை தொடர்பு கொண்டு மீனவர்களை மீண்டும் சில்லறை வர்த்தக பயனீட்டாளர்கள் பிரிவில் சேர்க்க வலியுறுத்தினார்.

அதனை ஏற்று மீனவர்களுக்கு சில்லறை வர்த்தக விலையான ரூ. 53.71-க்கே டீசல் விற்பனை செய்யப்படும் என பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு கண்ட ராகுல் காந்தி, வீரப்ப மொய்லி ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
TNCC president Gnanadesikan has thanked congress vice president Rahul Gandhi for helping fishermen to get diesel at a lower price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X