For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவே விரும்புகிறேன்: மலாலா உருக்கமான பேச்சு

By Mathi
Google Oneindia Tamil News

Malala Yousafzai
லண்டன்: தலிபான்களால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா, தாம் தொடர்ந்தும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மலாலாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக 2 அறுவை சிகிச்சைகள் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாக பேச முடியாத நிலையில் வீடியோ மூலம் அவர் பேசுகையில், இன்று என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன். உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்.

இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும். இதற்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன். இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது என்றார்.

English summary
Malala Yousafzai, the Pakistani schoolgirl shot in the head by the Taliban, spoke publicly for the first time today since she was attacked last October, saying in a video statement that she was recovering and thanked everyone for her “second life”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X