For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரீஸ் நகரின் இனி பெண்கள் பேண்ட் போடலாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Packing for Paris? Old law bans pants for women
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகரகம் பாரீசில் வசிக்கும் பெண்கள் பேண்ட் அணிவதை அந்நாட்டின் சட்டம் நீண்ட காலமாக தடை செய்துள்ளது. ஆனால். இந்தச் சட்டம் ஒரு அடையாளச் சட்டமாக இருந்து வந்ததே தவிர, இது அமல்படுத்தப்பட்டதில்லை.

குதிரை சவாரி செய்யும் பெண்கள் மற்றும் சைக்கிள் ஓட்டிச்செல்லும் பெண்களுக்கு இந்த தடையில் இருந்து விதிவிலக்கு உண்டு. எனவே அவர்களைப் போல நாங்களுக்கும் பேண்ட் போட அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தற்கால நாகரிகத்துக்கு பொருத்தமான வகையில் 200 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என அரசுக்கு பெண்கள் அமைப்பினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வந்தனர்.

இதற்கு பலன் கிடைத்துள்ளது. 'ஆண்களை போலவே பெண்களும் கால் சட்டைகளை அணிந்து இனி பாரீஸ் வீதியில் நடமாடலாம் என அந்நாட்டின் பெண்கள் உரிமைகளுக்கான அமைச்சர் நஜ்ஜத் வாளவுட் பெல்காகெம் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

பேண்ட் அணிந்து செல்லும் இனி கைது செய்ய முடியாது' எனவும் பிரான்ஸ் நாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார்.

English summary
Women in Paris can finally wear trousers without fear of criminal prosecution after the government said a more than 200-year-old ban no longer had any legal effect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X