For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெருங்கும் காதலர் தினம்: மகிழ்ச்சியில் நீலகிரி விவசாயிகள்

By Siva
Google Oneindia Tamil News

Valentine's day: Nilgiris flowers ready to fly
நீலகிரி: காதலர் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இருந்து ரோஜா, லில்லி உள்ளிட்ட மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளன.

நீலகரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதன்மையானது. அடுத்து மலை காய்கறிகள் சாகுபடி செய்வார்கள். மழை மற்றும் காலநிலை மாறி தேயிலை, காய்கறி சாகுபடி பாதிக்கப்படும்போது நீலகிரியில் கொய்மலர் விவசாயம் நடக்கும்.

நீலகிரி மாவட்டத்து கொய்மலர்களுக்கு தமிழகம், பிற மாநிலங்கள் தவிர்த்து வெளிநாடுகளிலும் மவுசு அதிகம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் காதலர்கள் அன்பை வெளிப்படுத்த மலர்களைக் கொடுப்பார்கள். அதனால் காதலர் தின சமயத்தில் நீலகிரியில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் கொய்மலர்கள் ஏற்றுமதியாகும்.

காதலர் தினத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் நீலகிரியில் இருந்து லில்லி, பல நிறங்களில் ரோஜா, அந்தூரியம் மற்றும் கார்னேஷன் மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மலர் ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

English summary
Flowers grown in Nilgiris are ready to get exported ahead of the Valentine's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X