For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: 'ஷட்டரை' திறந்த ஷெட்டருக்கு நெருக்கடி! ஆட்சியை துறக்க- ஜெயிலுக்கும் போக ரெடி!!

By Mathi
Google Oneindia Tamil News

Jagadish Shettar
பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்ட விவகாரம் கர்நாடக சட்டசபையில் கடுமையாக எதிரொலித்தது. தமது அரசு ராஜினாமா செய்வதாலோ தாம் சிறைக்குப் போவதாலோ காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனில் அதை செய்ய தாம் தயார் என்று கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகா சட்டசபையில் காவிரி நீரை திறந்துவிட்ட விவகாரத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு பதிலளித்த ஜெகதீஷ் ஷெட்டர், காவிரி பிரச்சினை தொடர்பாக பலமுறை அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி கருத்துகளையும், ஆலோசனையும் பெற்று செயல்பட்டு வந்துள்ளேன். நாம் இருப்பது கூட்டாட்சி முறையில்! இதனால் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாநிலங்கள் கட்டுப்பட்டவை. அதன்படி நாம் ஆட்சி செய்கிறோம்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கபிறப்பித்துள்ள உத்தரவு குறித்து நமது வழக்கறிஞர் நாரிமனுடன் கலந்து ஆலோசனை செய்து அவரது அறிவுரைப்படியே திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விட்டதற்கு பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள். நான் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டு ஜெயிலுக்கு செல்லவும் தயார் என்றார் அவர்.

English summary
Karnataka Chief Minister Jagadish Shettar Monday ticked off the Congress and Janata Dal-Secular for demanding his resignation for releasing Cauvery water to Tamil Nadu and said he was ready to do so if that was a solution to the row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X