For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழல்: ராகுலின் அரசியல் செயலாளர் கனிஷ்காவுக்கும் தொடர்பு- பாஜக

By Chakra
Google Oneindia Tamil News

Kanishka Singh
டெல்லி: ரூ. 470 கோடி ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அரசியல் செயலாளர் கனிஷ்கா சிங்கின் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் கிரித் சோமைய்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சிபிஐக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதில்,

போபர்ஸ் ஊழல் மாதிரியே இந்த ஹெலிகாப்டர் ஊழலிலும் இந்திய இடைத்தரகர்களின் கை இருந்தது உறுதியாகி வருகிறது.

இத்தாலிய செய்தித் தாளான Lettera 43 வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விவகாரத்தில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிரிஸ்டியன் மைக்கேலின் தந்தை வோல்ப்கேங் மேக்ஸ் ரிச்சர்ட் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமாக இருந்தார்.

இன்னொரு இடைத்தரகரான குய்டோ ரால்ப் ஹாஸ்ச்கே இந்தியாவின் Emaar-MGF ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குனராக இருந்துள்ளார். இந்த நிறுவனம் மறைந்த வேத் பிரகாஷ் குப்தாவுக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தை துவங்கியவர்களில் ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான கனிஷ்கா சிங்கின் தந்தையான மறைந்த எஸ்.கே.சிங்கும் ஒருவராவார். இவர்களது குடும்பத்துக்கும் இந்த நிறுவனத்தில் பங்கு உள்ளது.

இந்த ஹெலிகாப்டர் டீலில் கைமாறிய மொத்த ஊழல் பணத்தில் ரூ. 210 கோடி மைக்கேலுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் Emaar-MGF ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரால்ப் ஹாஸ்ச்கே ஒரு இயக்குனராக இருந்துள்ளார். காமன்வெல்த் ஊழல் விவகாரம் வெடித்த நிலையில் இவர் இந்தப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான பல காண்ட்ராக்ட்கள் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.

ஹாஸ்ச்கே தனக்கு முன்னாள் விமானப் படைத் தளபதி தியாகியுடனும் தொடர்பிருப்பதை இத்தாலிய நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த ஹெலிகாப்டர் ஊழலில் கனிஷ்கா சிங், Emaar-MGF, ஹாஸ்ச்கே ஆகியோரின் தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று சோமைய்யா கோரியுள்ளார்.

English summary
The BJP on Friday dragged Congress vice president Rahul Gandhi's key aide Kanishka Singh in the VIP chopper deal controversy, alleging that he played a key role in Italian manufacturer AgustaWestland winning the contract. BJP national secretary Kirit Somaiya has written to the Central Bureau of Investigation (CBI) director stating that there were "prominent signs of Indian connection in the AgustaWestland chopper deal, very similar to Bofors scam". Citing a report of Italian newspaper Lettera 43, Somaiya wrote: "The main commission agent Christian Michel's late father was 'close to the Congress party' and the other middleman, Guido Ralph Haschke, was a director of Emaar-MGF."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X