For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாவீரன் நெப்போலியனின் நிச்சயதார்த்த மோதிரம் ஏலத்திற்கு வருகிறது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாரிஸ்: மாவீரன் நெப்போலியன் முதல் மனைவி ஜோஸ்பின்-க்கு திருமண நிச்சயதின்போது அளித்த வைர மோதிரம் அடுத்தமாதம் 24-ம் தேதி பாரிசில் ஏலம் விடப்படுகிறது.

அலெக்சாண்டர் டி பியுகர்னைஸ் என்ற செல்வந்தரின் மறைவுக்குப் பின் விதவையான ஜோஸ்பினை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த மோதிரத்தை 1769-ம் ஆண்டு மார்ச் 8-ம்தேதி அவர்களின் நிச்சயதார்த்தத்தின் போது ஜோஸ்பினுக்கு நெப்போலியன் அணிவித்தார். அடுத்தநாள் (மார்ச் 9-ம்தேதி) அவர்களின் திருமணம் நடந்தது. 1810-ம் ஆண்டு அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

ஆனால், நெப்போலியன் இறக்கும் நிமிடம் வரை ஜோஸ்பினை மறக்கவில்லை என்று அவர் இறக்கும்போது உடன் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

நெப்போலியன் பணப் பிரச்சினையில் இருந்தபோது இந்த மோதிரத்தை மனைவிக்கு வழங்கியுள்ளார். அதனால் இது அதிக வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண வைர மோதிரமாகும்.

வைரம்பதிக்கப்பட்ட இந்த தங்க மோதிரம் 12,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,66,600) வரை ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக ஒசெண்டா என்ற ஏல நிறுவனம் கூறியுள்ளது.

English summary
A simple diamond and sapphire engagement ring that Napoleon Bonaparte offered to his first wife Josephine goes on auction near Paris next month, the auction house Osenat said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X