For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் மகனுக்கு சாப்பிட பிஸ்கட் கொடுத்து பின்னர் கொடூரமாக சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மணல் மூடைகளுக்கு நடுவே, சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திக் கொண்டு காயங்களுடன் பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

5 பேர் சுட்டுக்கொலை

5 பேர் சுட்டுக்கொலை

பாலச்சந்திரனுக்கு பாதுகாப்பாக நின்றிருந்த விடுதலைப் புலிகள் ஐந்து பேர், கைகள் கட்டப்பட்டு, தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கின்றனர்.

5 துப்பாக்கி குண்டுகள்

5 துப்பாக்கி குண்டுகள்

மற்றொரு படத்தில், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கேமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்கதியாக நின்ற பாலச்சந்திரனின் நெஞ்சில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன.

கொடூரக்கொலை உறுதி

கொடூரக்கொலை உறுதி

இதன் மூலம், ராணுவத்தின் பிடியில் இருந்த போது தான் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சேனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆவணப்படம் வெளியிட முடிவு

ஆவணப்படம் வெளியிட முடிவு

இலங்கை ராணுவத்தின் மேலும் பல கொடூரச் செயல்கள் அடங்கிய காட்சிகளை விரைவில் ஆவணப்படமாகவும் சானல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது.

2 அடி தூரத்தில் கொலை

2 அடி தூரத்தில் கொலை

ஆய்வாளர்களின் கூற்றுப்படி அவர் 2அடி தூரத்தில் இருந்தே சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பார் என்று அறியமுடிகிறது. அவரின் பாதுகாவலர்களை அவரின் கண்முன்னாலே சுட்டு விட்டு அவரையும் சுட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.இந்த படங்கள் வெளியானது பிரபாகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுட்த்தி உள்ளது.

English summary
London's Channel 4 has released another shocking image of the killing of LTTE Chief Prabhakaran's son Balachandran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X