For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம் பெண்கள்!

Google Oneindia Tamil News

லண்டன்: பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம். அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம்.

அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல்பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.

ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்ஸ்பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.

ஒரு நாளைக்கு 20,000 வார்த்தையாம்

ஒரு நாளைக்கு 20,000 வார்த்தையாம்

பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும்.

ஆண்களை விட 13,000 அதிகம்

ஆண்களை விட 13,000 அதிகம்

ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

பாக்ஸ்பி 2 தான் காரணம்

பாக்ஸ்பி 2 தான் காரணம்

பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்ஸ்பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.

எலிகளில் ஆண்கள்தான் வாயாடி

எலிகளில் ஆண்கள்தான் வாயாடி

மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் சவுண்டு அதிகம் இருக்கிறதாம்.

மொழி புரதம்

மொழி புரதம்

இந்த பாக்ஸ்பி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால்.

எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள்,வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்...

English summary
Ladies, the next time the man in your life complains you talk too much, silence him with science. Tell him - at length, of course - it is all because of the Foxp2 protein.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X