For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான 140 பக்க அறிக்கை... மனித உரிமைகள் கண்காணிப்பகம் புது குண்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கைக்கு எதிராக சேனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்திற்கு அடுத்த படியாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை ஒன்று வெளியாக உள்ளது.

ஈழத் தமிழ்ப் பெண்களின் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய பாலியல் வன்கொடுமைகளை தோலுத்துக் காட்டப்போகிறது அந்த அறிக்கை. இந்த அறிக்கையினை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ளது.

140 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை வரும் 25ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக, நியுயார்க்கைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன் கொடுமைகள்

பாலியல் வன் கொடுமைகள்

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள், பாலியல் துன்புறுத்தல்கள், மூன்றாந்தர சித்தரவதைகள் குறித்து இந்த அறிக்கை விபரிக்கவுள்ளது.

75 பாலியல் வல்லுறவுகள்

75 பாலியல் வல்லுறவுகள்

"நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்" - தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் பாலியல் வன்முறைகள்- என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள இந்த அறிக்கையில், 2006ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடையில் இரகசிய மற்றும் அதிகாரபூர்வ தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற 75 பாலியல் வல்லுறவுகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்த விபரங்கள் இடம்பெறவுள்ளன.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், தடுப்புக்காவலில் பரந்தளவிலான பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றுள்ளன.

தொடரும் பாலியல் வன்முறைகள்

தொடரும் பாலியல் வன்முறைகள்

அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இலங்கைப் படைகளாலும் காவல் துறையினராலும், தொடர்ந்தும் மேற் கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது" என்று அந்த அமைப்பின் ஆசிய பிரிவு பணிப்பாளர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

பெண்களோடு ஆண்களும் தொந்தரவு

பெண்களோடு ஆண்களும் தொந்தரவு

மேலும் இயக்குனர் பிராட் ஆடம்ஸ்,"விடுதலைப்புலிகள் என சந்தேகித்து கைது செய்யப்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் கற்பழிப்பு மற்றும் செக்ஸ் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட 31 வயது தமிழ் பெண் கொழும்பில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தின் 4-வது மாடிக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட வில்லை. மறுநாள் அவரை போட்டோ எடுத்தனர்.

சொல்ல முடியாத சித்ரவதைகள்

சொல்ல முடியாத சித்ரவதைகள்

கைரேகை அடையாளங்களும் எடுக்கப்பட்டது. பின்னர் வெற்று வெள்ளை பேப்பரில் அவரிடம் கையெழுத்து பெற்றனர். அவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். அவர் குறித்த தகவல்களை பெற்றுள்ளனர். அதை தொடர்ந்து அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அப்பெண்ணை அடித்து உதைத்த ராணுவம், உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்தது. பின்னர் இருட்டறையில் அடைத்து வைத்து 2 பேரால் கற்பழிக்கப்பட்டார். அவர்கள் சிங்களத்தில் பேசியுள்ளனர்.

மின்சாரம் பாய்ச்சினர்

மின்சாரம் பாய்ச்சினர்

இதே போன்று பிடித்து செல்லப்பட்ட 23 வயது இளைஞரும் ராணுவத்தினரால் 3 நாட்கள் செக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவரை நாற்காலியில் கட்டி வைத்து உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமை புரிந்துள்ளனர். சிகரெட்டால் சுட்டு சித்ரவதை செய்துள்ளனர். ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றொரு இளைஞரை பல கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவரது பிறப்பு உறுப்பில் மெட்டல் கம்பியை திணித்து சித்ரவதை செய்துள்ளனர். இது போன்று பலர் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் மேல்மட்ட ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்துலக விசாரணை

அனைத்துலக விசாரணை

இந்நிலையில் வழக்கம் போல் இலங்கைப்படையினரின் பாலியல் குற்றங்களை, விடுதலைப் புலிகள் ஆதரவு பரப்புரை என்றும், பொய் என்றும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இதையடுத்து இலங்கை அரசாங்கம் இந்த மீறல்கள் குறித்து விசாரிக்கத் தவறியுள்ளதால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மூலம் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றும் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
While widespread rape in custody occurred during the armed conflict (with LTTE) that ended in May 2009, “HRW found that politically motivated sexual violence by the military and police continues to the present.” HRW Asia Director Brad Adams claimed:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X