For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க பொருளாதார மாநாடு -மோடிக்குப் பதில் கேஜ்ரிவால் பேசுவார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Arvind Kejriwal
டெல்லி: அமெரிக்காவில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் சிறப்புரை ஆற்றவிருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டு விட்டதால், அவருக்குப் பதில் அரவிந்த் கேஜ்ரிவால் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 17 -வது "Wharton India Economic Forum" என்ற பெயரில் பொருளாதார மாநாடு இம்மாதம் 22,23-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இந்திய பொருளாதர வளர்ச்சி குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி "வீடியோ கான்பரன்ஸ்" மூலம் சிறப்புரை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் சிறப்புரைக்கு கடும் எதிர்ப்பு உருவானது. இதனால் திடீரென மோடியின் சிறப்புரை ரத்து செய்யப்பட்டது.

இந்த மாநாட்டில், மாண்டேக்சிங் அலுவாலியா, அமைச்சர் மிலிந்த் தியோரா உள்ளிட்டோர் உரையாற்ற இருக்கின்றனர். மோடியின் சிறப்புரை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றி பேசுவதும், விவாதிப்பதும் தான் இம்மாநாட்டின் முக்கிய நோக்கம். அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்களைப் பற்றி பேசுவதற்கோ அல்லது அவர்களது கொள்கை கோட்பாடுகளைப் பற்றி பேசுவதற்கோ அனுமதி இல்லை என்பதால் மோடியின் உரை ரத்து செய்யப்பட்டது என்றனர்.

மோடிக்குப் பதில் கேஜ்ரிவால்

இந்தநிலையில் தற்போது மோடிக்குப் பதில் அரவிந்த் கேஜ்ரிவால் உரை நிகழ்த்தவுள்ளார். இதற்கான அழைப்பை மாநாட்டு அமைப்பாளர்கள் கேஜ்ரிவாலுக்கு விடுத்துள்ளனர்.

English summary
Activist and politician Arvind Kejriwal has been invited to replace Gujarat Chief Minister Narendra Modi as the keynote speaker at an event at the Wharton Business School later this month. Modi was dropped last night as the main speaker at the Wharton India Economic Forum, largely because of pressure from the management and alumni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X