For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் காலையில் செம வெயில்.. மாலையில் வெளுத்து வாங்கிய மழை!

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் வெயில் வெளுத்துக் கட்டுகிறது, சென்னையில் பரவாயில்லை என்று காலையில்தான் செய்தி போட்டோம். ஆனால் மாலையில் ஊட்டி, கொடைக்கானல் ரேஞ்சுக்குப் போய் விட்டது பெங்களூர். அந்த அளவுக்கு வெளுத்து வாங்கி விட்டது மழை.

அடுத்த 2 நாட்களில் பெங்களூரை விட மிகவும் குறைந்த வெப்ப நிலை சென்னையில் நிலவும் என்றது வானிலை நிலவரம்.

அதற்கேற்ப இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கி வந்தது. ஆனால் மாலையில் அப்படியே நிலைமை தலைகீழாக மாறி செம மழை பெய்து மக்களை குளிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை இன்று பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரியாக இருந்தது.

பெங்களூரில் 34 டிகிரி

பெங்களூரில் 34 டிகிரி

இதுவே பெங்களூரில் இன்றைய அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை 34 டிகிரியாக பதிவானது.

நாளைக்கு சென்னையில் 31 டிகிரிதான்

நாளைக்கு சென்னையில் 31 டிகிரிதான்

நாளை சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரத்தில் 27 முதல் 31 டி்கிரி வரை வெப்பநிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் 32 டிகிரி அடிக்கும்

பெங்களூரில் 32 டிகிரி அடிக்கும்

பெங்களூரைப் பொறுத்தவரை நாளை பகல் நேரத்தில் வெப்பநிலை 23 முதல் 32 டிகிரி வரை வெயில் அடிக்குமாம்.

புதன்கிழமையும் பெங்களூரில் வெயில் ஜாஸ்தியா இருக்குமாம்

புதன்கிழமையும் பெங்களூரில் வெயில் ஜாஸ்தியா இருக்குமாம்

புதன்கிழமையும் கூட பெங்களூரில்தான் வெயில் சற்று அதிகமாக இருக்கும் என்கிறது வானிலை முன்னறிவிப்பு. அதாவது அன்று பகல் நேரத்தில் வெப்பநிலை 22 முதல் 32 டிகிரி வரை இருக்குமாம்.

சென்னை கொஞ்சம் பெஸ்ட்தான்

சென்னை கொஞ்சம் பெஸ்ட்தான்

சென்னையைப் பொறுத்தவரை 27 முதல் 30 டிகிரி வரை வெயில் அடிக்குமாம்.

வெளுத்து வாங்கிய மழை

வெளுத்து வாங்கிய மழை

இப்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இன்று மாலையில் பெங்களூர் பெரும் மழை வந்து மக்களை ஆச்சரியப்படுத்தியது. பகல் முழுவதும் வியர்வையில் நனைந்த மக்கள் மாலையில் மழையைப் பார்த்து அசந்து போய் விட்டனர். சும்மா சொல்லக் கூடாது, பலத்த காற்றுடன் பெய்த இந்த மழையால் பெங்களூர் நகரமே ஜில்லாகிப் போய் விட்டது.

English summary
Believe it or not, hottest Chennai is cooler than the coolest Bangalore according to a weather forecast report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X