For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிக்கெட் எந்திரம் வாங்கியதில் முறைகேடு: அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Senthil Balaji
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பயணச்சீட்டு வழங்கும் கையடக்க எந்திரம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக தவறான தகவலை வெளியிட்ட செய்தித்தாள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டசபையில் இது தொடர்பாக இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர்,

பயணச்சீட்டு எந்திரம் வழங்க 4 நிறுவனங்கள் முன்வந்ததாக குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, அதில் 3 நிறுவனங்கள் தகுதியானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவற்றில் குறைவான விலைக்கு எந்திரங்களை வழங்க முன்வந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முறைப்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அதன் அடிப்படையில் எவ்வித முறைகேடும் இன்றி பயணச்சீட்டு எந்திரங்கள் வாங்கப்பட்டதாக அவர் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு எந்திரம் வழங்கும் இன்ஜினியரிங் என்ற அந்த நிறுவனம் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இதேபோன்ற எந்திரங்களை வழங்கியவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து தவறான தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்ட செய்தித் தாள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

English summary
Transport minister Senthil Balaji has refuted the scam charge in buying ticket vending machines for govt bus conductors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X