For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1984- சீக்கியர் படுகொலையை 'இனப்படுகொலை'யாக அறிவிக்க அமெரிக்கா மறுப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 1984ஆம் ஆண்டு நாட்டின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை 'இனப்படுகொலை' என பிரகடனப்படுத்த அமெரிக்கா மறுத்துள்ளது.

1994-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களே சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்தனர். இப்படுகொலைச் சம்பவம் சீக்கியர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.

அண்மையில் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இணையம் வழியே ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 1984-ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்பதற்காக இணைய தளத்தின் கையெழுத்தியக்கம் நடத்தியது. இதுவரை 30,517 பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

இந்த பிரச்சாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின்வ் வெள்ளை மாளிகையின் அறிக்கையில்,1984- ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையான மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். இதை அமெரிககா தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டு கருத்துகளை தெரிவித்து வருகிறது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இனப்படுகொலை எனப் பிரகடனப்படுத்த மறுத்திருக்கிறது.

English summary
In response to a petition from the influential Sikh community seeking recognition of violence against Sikhs in India during November 1984 as "genocide", the White House has said it continues to "condemn" and "work against" violence directed at people because of their religion
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X