For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்டன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது 'செல்போன் வெடிகுண்டுகள்'?

By Mathi
Google Oneindia Tamil News

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் செல்போன் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாஸ்டன்நகரில் நடைபெற்ற மாராதான் போட்டியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறுவன் உட்பட 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Aftermath of Boston Marathon Bombing: How Do Terrorists Use Improvised Explosive Devices?
மாராதான் போட்டி நடைபெற்ற போது பிற்பகல் 2.45 மணிக்கு இயக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 50 அல்லது 100 மீட்டர் தொலைவுக்குள் 2வது குண்டு வெடிக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடுத்தடுத்த தொடர் சம்பவங்களானது தொலைவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதாக இருந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் குண்டுகள் வெடிக்கத் தொடங்கிய உடனே பாஸ்டன் நகரில் செல்போன் இணைப்புகள் சேவை துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமாக செல்போன் சேவையை துண்டிக்கவில்லை என்றும் ஒரே நேரத்தில் மாராதான் போட்டியில் பங்கேற்ற பல்லாயிரம் பேர் செல்போன்களை பயன்படுத்தியதால் நெட்வொர்க்கில் நெருக்கடி ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் செல்போன் சேவைகளை துண்டித்ததன் மூலம் இதர செல்போன் வெடிகுண்டுகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பொதுவாக ஒரு செல்போனை வாங்கி 30 நிமிடத்துக்குள் வெடிகுண்டுகளை பொருத்திவிடக் கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.. அந்த வகையான செல்போன் வெடிகுண்டுகளே பாஸ்டன்நகரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்கிறார் அவர்.

English summary
The bombing near the finish line of the 117th Boston Marathon on Monday killed two and injured more than 100 people on site. Now comes the search for who planted and detonated the explosives, and the motive. The first bomb was detonated at about 2:45 P.M. local time near one of the many classic storefronts lining the marathon’s home stretch. The second explosive followed within minutes about 50 to 100 yards away. Law enforcement later found and dismantled at least two more explosive devices, according to various news reports.Improvised explosive devices (IEDs) such as those used to attack the marathon are sometimes triggered remotely by cell phones
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X