For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராத்திரி நல்லா தூங்குங்க.. காலையில வாசிக்கலாம்!

Google Oneindia Tamil News

டல்லாஸ்: இரவு நன்றாக தூங்கி காலையில் ஹார்மோனியம் மீது கை வைத்தால் அற்புதமான இசையும், ட்யூனும் பிறக்குமாம் - சொல்கிறது ஒரு ஆய்வு.

மனசை வருடும் இதமான மெலடி ட்யூன்களையும், இசையையும் விரும்பும் இசைக் கலைஞர்கள் இரவு நன்றாக தூங்கி காலையில்தான் இத்தகையை இசையை உருவாக்குவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

டல்லாஸில் உள்ள தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

பியானாவோவில் இசைப் பிரளயம்....

பியானாவோவில் இசைப் பிரளயம்....

பியானோ கலைஞர்களை வைத்து இந்த ஆய்வை இவர்கள் மேற்கொண்டார்களாம்.

துல்லியமும்.. மெல்லிசையும்

துல்லியமும்.. மெல்லிசையும்

இரவு நன்றாக தூங்கி விட்டு காலையில் இசையமைத்தவர்கள் துல்லியமான இசையையும், அழகான மெல்லிசையையும் கொடுத்தனர் என்று கூறுகிறார்ஆய்வுக் குழு்த் தலைவரான உதவிப் பேராசிரியர் சாரா ஆலன்.

மூளை என்ன சொல்கிறது...

மூளை என்ன சொல்கிறது...

மூளை எப்படி முடிவெடுக்கிறதோ அப்படித்தான் நமது மனமும், எண்ணமும் செயல்படும் என்பதே இந்த ஆய்வின் சாராம்சம். எதை நிராகரிக்க வேண்டும், எதை ஏற்க வேண்டும் என்பதை மூளைதான் 90 சதவீதம் சொல்கிறது. அருமையான இசையாக இருந்தாலும் சரி, அறுவையானதாக இருந்தாலும் சரி அது மூளை போட்ட உத்தரவின் பிரதிபலிப்பே என்கிறார் சாரா.

முதல் ட்யூனை விட 2வது ட்யூன் பெட்டர்

முதல் ட்யூனை விட 2வது ட்யூன் பெட்டர்

இசைக் கலைஞர்களிடம் ஒருட்யூனை கொடுத்து அதை நன்றாக தூங்குவதற்கு முன்பு ஒருமுறை வாசிக்கக் கூறினர். அதேபோல நன்றாக தூங்கி விட்டு வாசிக்கச் சொன்னபோது முதல் முறையை விட 2வது முறை பிரமாதமாக அதை வாசித்தனராம்.

60 பேரை வைத்து ஆய்வு...

60 பேரை வைத்து ஆய்வு...

இசையைப் பாடமாகக் கொண்டு படித்து வரும் 60 மாணவர்களை வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

English summary
Musicians who learn a new melody demonstrate enhanced skills after a night's sleep, according to a new study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X