For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கற்பழிப்பு குற்றவாளிக்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்து தூக்கில் போடுங்கள்... சுஷ்மா சுவராஜ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுக்க வேண்டும். பின்னர் தூக்கில் போடவேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அனைத்து தரப்பினரிடையேயும் கொதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து கூறியுள்ள சுஷ்மா சுவாராஜ் கூறியுள்ளதாவது:

சிறுமியை இரண்டு தினங்கள் அடைத்து வைத்து சீரழித்தவன் மனரீதியாக பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம். எனவே அவனுக்கு முதலில் ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்து சித்ரவதை செய்யவேண்டும். பின்னர் துடிக்கத் துடிக்க தூக்கில் போடவேண்டும். அப்போது தான் இதைப் பார்ப்பவர்களுக்கும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அச்சம் உண்டாகும் என்றார்.

பாலியல் வன்கொடுமை சட்டத்தினை மேலும் கடுமையானதாக மாற்றவேண்டும் என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

ஜனாதிபதி அதிர்ச்சி

சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்த துயர சம்பவத்தின் பாதிப்பில் இருந்து சிறுமி விரைவில் குணமடைய, அவரின் பெற்றோருடன் இணைந்து இறைவனிடம் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரியான வன்புணர்ச்சி சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சமூகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ள பிரணப் முகர்ஜி, குற்றவாளிகளுக்கு பாடம் புகட்டும்படி கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாதிரியான குற்றங்களை நம் சமுதாயம் ஒற்றுமையுடன் இணைந்து களைய வேண்டும் என்றும் குடியரசு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
Rapists of minor girls reflect a "mental sickness" which needs a "shock treatment" of hanging, Leader of the Opposition in the Lok Sabha Sushma Swaraj said Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X