For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகு ஆபரேஷன் செய்து கொண்ட அமெரிக்க நாய்க்குட்டி

Google Oneindia Tamil News

Cosmetic surgery done for a American dog
சான் ஆன்டானியோ: கண், காதை மறைக்கும் அளவுக்கு முகத்தில் சதை வளர்ந்த நாய்க்கு 2 முறை ஆபரேஷன் செய்யப்பட்டு சதைகள் அகற்றப்பட்டுள்ளன.

நம்மூரில் நடிகைகள் ஆபரேஷன் மூலம் தங்களை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சிப்பார்கள் என்பது நாமறிந்தது தான். ஆனால், நாய் ஒன்று அழகு ஆப்பரேஷன் செய்து கொண்டதை கேட்கும் போதே வியப்பாக இருக்கிறதா?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் சான் ஆன்டானியோ நகரை சேர்ந்த 2 வயது நாய்க் குட்டி சீசேம். சைனீஸ் ஷெர்பே வகையை சேர்ந்தது. துணியை சுருட்டி வைத்தது போல இதன் உடல் முழுவதும் சதை தொங்கியது.

சீசேமுக்கு கொஞ்சம் ஓவர் தான்...

இந்த வகை நாய்களுக்கு சதை இப்படித்தான் இருக்கும் என்றாலும், சீசேமுக்கு ரொம்ப ஓவராக இருந்தது.

ஐயோ... கண்ணு, காது...

நாள் ஆகஆக சதைகள் இன்னும் அதிகம் வளர்ந்து கண்ணையும் காதையும் மறைக்க தொடங்கின. பார்வை தெரியாமலும், காது கேட்காததாலும் சீசேம் ரொம்ப சிரமப்பட்டது. சதையின் திரட்சிகள் அதிகம் இருந்ததால் நோய்த் தொற்றால் சிரங்கும் ஏற்பட்டது.

ஆபரேஷன் தான் ஒரே தீர்வு...

இதையடுத்து, சான் ஆன்டானியோ நகரை சேர்ந்த கருணை மையத்தின் ஏற்பாட்டின் பேரில், உள்ளூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சீசேம் நாய் சேர்க்கப்பட்டது. அதை பரிசோதித்த டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர்.

இப்போ பைன் சீசேம்...

2 முறை ஆபரேஷன் செய்யப்பட்டு, அதிகம் இருந்த சதைகள் அகற்றப்பட்டுள்ளன. அதன் கண், காது தற்போது நன்றாக திறந்துள்ளன. சீசேம் இனி நன்கு பார்க்க முடியும், கேட்க முடியும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

வளர்ப்பு செல்லமாகத் தயார்...

சீசேமை யாரேனும் தத்தெடுக்கலாம் என ஆன்டானியோ கருணை மையம் அழைப்பு விடுத்துள்ளது.

English summary
Chinese sherben dog of America had under gone cosmetic surgery 2 times to reduce the extra muscles in his face.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X