For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் உதவிகள்... உணவு, தங்குமிடம், உடைகள், சமையல் பாத்திரங்கள், பஸ்:

By Chakra
Google Oneindia Tamil News

- 7.11.2012 அன்று நடைபெற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் கோவிலிலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர்.

- 7.11.2012 இரவு முதல் 17.01.2013 வரை ரூ.16,27,061/ மதிப்பில் தினசரி உணவு வழங்கப்பட்டது.

தற்காலிக தங்குமிடம் 8.11.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் நிரந்தர நிவாரண தங்குமிடம் ரூ.21,50,000 செலவில் கட்டப்பட்டது. கூடுதலாக ஒரு நிரந்தர தங்குமிடம் ரூ.4,50,000 செலவில் கட்டப்பபட்டது.

* 8.11.2012 அன்று 3.29 லட்சம் செலவில் 1 செட் உடைகளும், சமையல் பாத்திரங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. பாய், சால்வைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன.

- குடிநீர் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தால் ரூ.8,45,000 செலவில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் வசதிகள் செய்யப்பட்டது.

- பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் குழு அமைக்கப்பட்டன.

- பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய நோட்டு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

- புதிய வழித்தடம் வழியாக பேருந்துகள் விடப்பட்டது. இத்தனை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

- பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு 326 குடும்பங்களுக்கு முதலமசைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 வீதம் ரூபாய் 1 கோடியே அறுபத்து மூன்று லட்சம் 9.11.2012, 23.11.2012 மற்றும் 3.12.2012 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டது.

- 7.11.2012 அன்று ஆதிதிராவிட மக்களின் வீடுகளை சேதப்படுத்தியதற்காக கூடுதலாக 99 பசுமை வீடுகள் கட்ட இரண்டு கோடியே அறுபத்தி ஏழு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை (ரூ.2,67,30,000) அனுமதித்து 22.1.2013ல் ஆணைகள் வெளி யிடப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் 7.11.2012 அன்று ஆதிதிராவிடர் மக்களின் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 1200 ஆதிதிராவிட மக்களுக்குக் கூடுதல் நிவாரணம் அளிக்க ஏதுவாக ரூபாய் ஏழு கோடியே முப்பத்து இரண்டு லட்சத்து ஏழாயிரத்து எழுநூற்று பதினைந்து (ரூ.7,32,07,715) நிதி ஒப்பளிப்பு செய்து 24.01.2013ல் ஆணைகள் வெளியிடப்பட்டது.

English summary
CM Jayalalithaa today listed slew of steps taken after Dharmapuri caste clashes, in assembly today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X