For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவலைக்கிடமாக இருக்கும் பாஜகவில் மீண்டும் இணையமாட்டேன்: எதியூரப்பா

By Mathi
Google Oneindia Tamil News

Yeddyurappa
பெங்களூர்: கர்நாடகாவில் கவலைக்கிடமாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணையமாட்டேன் என்று கர்நாடக ஜனதா தளத்தின் தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூர் ராஜாஜி நகர் தொகுதி கர்நாடக ஜனதா தள வேட்டாபளரான முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டா எதியூரப்பா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் பாஜகவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அந்தக் கட்சி தற்போது உள்ள நிலையில் 30 அல்லது 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே மிகக் கடினம். கர்நாடகத்தில் எங்கள் கட்சி 60 தொகுதிகளைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு டெல்லியில் சென்று மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக மாநிலக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் இணைவேன் என்று கூறப்படும் செய்திகளில் உண்மை இல்லை என்றார்.

English summary
Karnataka Janata Party President Yeddyurappa has denied to rejoin with BJP after the assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X