For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்லி.யில் அமளிக்கு இடையே உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் கடுமையான அமளிக்கு மத்தியில் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமர் மன்மோகன்சிங், சட்ட் அமைச்சர், ரயில்வே அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று மாலை 3 மணிக்கு சபை கூடிய போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு மத்தியில், தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மசோதாவை வரவேற்று காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் நிருபம், தேசியவாத காங்சிரஸ் உறுப்பினர் சஞ்சீவ் கணேஷ் நாயக் ஆகியோர் பேசினர். ஆனால் சபையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The Manmohan Singh-led UPA government tabled the Food Security Bill as soon as the Lok Sabha met after 3 pm on Monday. Earlier the lower house of Parliament was adjourned twice on Monday. An aggressive Opposition demanded the resignation of Prime Minister Manmohan Singh and Union ministers Pawan Kumar Bansal and Ashwani Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X