For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

911க்கு போன் செய்து 3 பெண்களை மீட்க உதவிய இளைஞருக்கு வாழ்நாள் முழுக்க இலவச பர்கர்!

Google Oneindia Tamil News

Free burgers for man who helped Cleveland kidnapping victims
வாஷிங்டன்: 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 3 பெண்களை மீட்க உதவிய இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ‘பர்கர்' பரிசு அளித்து கவுரவிக்கப்பட்டுள்ளார்.

தனித்தனியாக 10 வருடங்களுக்கு அமெரிக்காவில் காணாமல் போன 3 இளம்பெண்கள், சமீபத்தில் ஓரே வீட்டில் மீட்கப்பட்டனர். இவர்களை மீட்க சார்லஸ் ராம்சே என்ற நபர் தான் போலீஸுக்கு உதவினார். இவர் 911 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்து சொன்னதன் மூலமாகவே அப்பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எனவே, அவரது அளப்பறியா உதவிக்கு பரிசாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக பர்கர் சாப்பிடும் வகையில் சிறப்பான அனுமதி அட்டை ஒன்றை தயார் செய்து சார்லஸ்க்கு வழங்கியுள்ளது தனியார் உணவகம் ஒன்று.

இது குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் கூறும்போது, ‘ தன் சாப்பாட்டை பாதியில் நிறுத்தி விட்டு அப்பெண்களுக்கு உதவியுள்ளார் சார்லஸ். எனவே, அவர் வாழ்நாள் முழுவதும் வயிறாற பர்கர் சாப்பிடும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

English summary
Several Cleveland-area restaurants have come together to create a unique prize for a man praised for helping save three women held captive for more than a decade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X