திறந்த வெளியில் ‘கக்கா’ போனதால் 353 பஞ்சாயத்து உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
மும்பை: திறந்த வெளியில் மல, ஜலம் கழித்தார்கள் என்ற குற்றத்திற்காக, அதிரடியாக 354 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது மகாராஷ்டிரா அரசு.
திறந்த வெளியில் மல, ஜலம் கழிப்பதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் உண்டாகின்றன. இதன் காரணமாக பல்வேறு நோய்களும் பரவுகின்றன. அதனை களையும் நோக்கில் 'சம்பூர்ணா சுவாச்சட்டா அபியான்' என்ற திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
முத்ற்கட்டமாக கிராமங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாநில ஊரக மேம்பாட்டு அமைச்சகம், கிராம பஞ்சாயத்துகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி தேர்தெடுக்கப்பட்ட சில பஞ்சாயத்து உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வீடுகளில் கட்டாய கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனாலும், உத்தரவை மதிக்காமல், தொடர்ந்து 354 பஞ்சாயத்து உறுப்பினர்களின் வீடுகளில் கழிவறை வசதி செய்யப்படாமல் இருந்தது மாவட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.
கழிவறைகளை அமைத்துக்கொள்ள உரிய அவகாசம் அளிக்கப்பட்டும், கழிவறைகளை கட்டாத 354 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
பதவிநீக்கம் செய்யப்பட்டவர்களில், 27 பேர் சந்திராபூர் பஞ்சாயத்து, 17 பேர் பத்ராவதி பஞ்சாயத்து, 15 பேர் வரோரா, 7 பேர் சிமூர், 9 பேர் சிண்டேவாஹி, 15 பேர் முல், 18 பேர் சவோலி, 14 பேர் டொம்புர்னா, 64 பேர் கோண்ட்பிப்ரி, 17 பேர் பல்லார்பூர், 54 பேர் ரஜுரா, 33 பேர் கோர்ப்பனா, 58 பேர் ஜிவ்டி பஞ்சாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஆவார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications