For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டுல இருக்கற எல்லா நதிகளையும் இணைக்க இதுதான் சரியான நேரம்: ’நாட்டாமை’ சரத்குமார்

Google Oneindia Tamil News

Sarath slams states and centre for bad management of natural disaster relief works
சென்னை: வட மாநிலங்களில், மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புகள் ஆயத்த நிலையில் இல்லாததால் பெரும் அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வட மாநிலங்களில் உள்ள புனிதத் தலங்களுக்கு நாடு முழுவதிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர். இந்த வருடம் அந்த பக்தர்கள் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 90 பக்தர்களும் அடங்குவார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். பாதிப்புகளை வைத்துப் பார்க்கும் போது இது குறைவான தொகை என்று தெரிய வருகின்றது. எனவே, நிவாரண தாகையை உடனே அதிகரித்து அளிக்க வேண்டும்.

மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புகள் ஆயத்த நிலையில் இல்லாததால் சேதங்கள் பெரும் அளவு ஏற்பட்டுள்ளது. ராணுவப்படைகளை கூடுதலாக அனுப்பி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

ஜூன் மாதம் விவசாயத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியாத அளவு மேட்டூர் அணையில் கடும் வரட்சி நிலவி வருகின்றது. அதே நேரம் யமுனை ஆற்றில் வெள்ள அபாயம். சமனற்ற சூழ்நிலையில் தேசிய நதிகளை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டிய தருணமாகும்.

மேலும், வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
AISMK leader Sarath Kumar slammed states and centre for bad management of natural disaster relief works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X