For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலிபான் தாக்குதலில் பலியான 3 இந்தியர்கள் ஆந்திரா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான 3 இந்தியர்கள் யார் என்ற அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களில் 2 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

காபூலில் புதன்கிழமையன்று தலிபான்கள் குண்டுவெடிப்பை நடத்தினர். அதில் 3 இந்தியர்கள் பலியானார்கள். இவர்கள் யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காபூலில் நடந்த தலிபான்கள் தாக்குதலில் பலியான 3 இந்தியர்களில் இருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.

ஆந்திராவைச் சேர்ந்த கிலாஜி சந்தீப் வெய்ட்டராக பணியாற்றி வந்தார். குருதி நவீன் குமார் பிரண்ட் ஆபிஸ் மேனேஜராக இருந்தார். மேர்கு வங்கத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி கெளசிக் லான்ட்ரி மேனேஜராக வேலை பார்த்தவர் ஆவார் என்றார்.

3 இந்தியர்களின் உடல்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கையை தற்போது இந்திய தூதரகம் முடுக்கி விட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் மொத்தம் 9 பேர்கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Of the three Indians killed in on Wednesday's blast in Kabul, two were from Andhra Pradesh and one was from West Bengal. "I do regret to inform you that Tuesday morning in the course of an attack on a housing compound in Kabul which housed foreigners, three Indian nationals were killed. The three were- Gilaji Sandeep, working as a waiter, Gurudi Naveen Kumar, the front office manager (both from Andhra Pradesh) and Chakraborty Kaushik, a laundry manager, from West Bengal," spokesperson in the External Affairs Ministry said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X