For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்...

Google Oneindia Tamil News

ரோம்: நவீன மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி, வரும் காலங்களில் தலை மாற்றுச் சிகிச்சை கூட சாத்தியமானது என இத்தாலி மருத்துவர் ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய உலகத்தில் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளும் மருத்துவ வசதியை நாம் பெற்றுள்ளோம். சமீபத்தில் முதன் முறையாக வெற்றி கரமாக முகம் மாற்றுச் சிகிச்சை கூட அதிவிரைவாக செய்து சாதனை நிகழ்த்தப் பட்டது.

தற்போது, அதன் அடுத்த கட்டமாக தலை மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய இயலும் எனக் கூறி திகில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார் இத்தாலி மருத்துவர் ஒருவர்.

புதிய முயற்சி...

புதிய முயற்சி...

இத்தாலியைச் சேர்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் சர்ஜியோ கேனவேரோ தான் இப்படி ஒரு அதிர்ச்சி கண்டுபிடிப்புக்கான அடித்தளத்தை போட்டுக் கொண்டிருப்பவர்.

சொர்க்கம்...

சொர்க்கம்...

இவர் தனது கண்டுபிடிப்பு முயற்சியான தலை மாற்றுச் சிகிச்சைக்கு ‘ஹெட் அனாஸ்டோமோசிஸ் வென்சர்' அல்லது ‘சொர்க்கம்' என பெயரிட்டுள்ளார்.

சரியான தேர்வு வேண்டும்...

சரியான தேர்வு வேண்டும்...

தலை மாற்றுச் சிகிச்சைக்கான செய்முறையாக பின்வரும் படிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது முதலில், தலை மாற்றுச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய இரு தலைகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டுமாம்.

அட்வான்ஸ்டு பாலிமர் க்ளூ...

அட்வான்ஸ்டு பாலிமர் க்ளூ...

பின்னர், அல்ட்ரா சார்ப் பிளேடால் தானம் தரப்படுகின்ற தலையை பிரித்து, பின் அதை அட்வான்ஸ்டு பாலிமர் எனப்படும் பசையால் தேவைப்படும் உடலில் சேர்க்க வேண்டுமாம்.

36 மணி நேர ஆபரேஷன்...

36 மணி நேர ஆபரேஷன்...

இந்த ஆபரேஷனை 100 நிபுணர்களின் பங்களிப்பில் , 36 மணி நேரத்தில் சுமார் 8.5 மில்லியன் டாலர் செலவில் செய்து முடிக்க முடியும் என சர்ஜியோ கூறுகிறார்.

நல்ல அடித்தளம்...

நல்ல அடித்தளம்...

சர்ஜியொபொவின் முயற்சியைப் பாராட்டும் சக ஆராய்ச்சியாளர்கள், ‘ தலை மாற்றுச் சிகிச்சைக்கான நல்ல அடித்தளாத்தை சர்ஜியோ உருவாக்கிக் கொண்டிருப்பதாக பாராட்டுகிறார்கள்.

English summary
It has until now been the work of science fiction and horror films, but scientists could soon be carrying out complete human head transplants, a leading surgeon has said. Neurosurgeon Dr Sergio Canavero, from the Turin Advanced Neuromodulation Group, believes the operation would take 100 surgeons up to 36 hours and would cost £8.5million.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X