For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்களின் விற்பனை பெரும் சரிவு!: தொழிற்சாலைகளின் வேலை நேரத்தை குறைக்கும் நிறுவனங்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதார மந்தநிலையில் நாட்டின் கார்கள் விற்பனை கடந்த மாதம் 9% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரபல நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பு அளவைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கின்றன.

பொருளாதார மந்த நிலை என்பது உலகெங்கும் அனைத்து சந்தைகளையும் பாடாய்படுத்தி வருகிறது. இந்த சுழலில் இந்தியாவும் தப்பவில்லை. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த தாக்கம் வாகன தயாரிப்பு, விற்பனை சந்தையையும் பதம் பார்த்துள்ளது.

போனவருஷமும் இந்த வருஷமும்

போனவருஷமும் இந்த வருஷமும்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 1,53,450 கார்கள் விற்பனையான நிலையில் நடப்பாண்டிலோ 1,39,632தான் விற்பனையானதாம்!

மாருதி

மாருதி

மாருதி சுஸிகி நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கார்கள் விற்பனை 70,977! நடப்பாண்டிலோ 65,172தானாம்!

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார்கள் விற்பனைதான் சற்று கூடுதல்! கடந்த ஆண்டு விற்பனை 30, 363.. நடப்பாண்டிலோ 30,577!

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 29.17% சரிவைக் கண்டிருக்கிறது. அதன் கார்கள் விற்பனை கடந்த ஆண்டு 13,595 ஆக இருந்தது. நடப்பாண்டிலோ இது 9,628ஆக குறைந்து போயுள்ளது.

மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா

மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா

மகிந்த்ரா அண்ட் மகிந்தரா நிறுவனமும் 17.17% சரிவைக் கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19,348ஆக இருந்த விற்பனை 15,916 ஆக குறைந்து போயுள்ளது.

இப்படி விற்பனை சரிவைக் கண்டுவருவதால் தயாரிப்பையும் கணிசமாக குறைத்து வருகின்றன இந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

இதற்காக வேலை நேரத்தை 8ல் இருந்து 6 மணி நேரமாகவும், தொழிற்சாலைகள் செயல்படும் நாட்களை வாரத்துக்கு 5 நாட்களாகவும் கூட குறைக்க ஆரம்பித்துள்ளன. மேலும் மாதத்தில் சில நாட்கள் தொழிற்சாலைகளை மூடி தயாரிப்பையும் நிறுத்தி வைத்து வருகின்றன.

English summary
Car sales in India fell for a record eighth month in row in June with a dip of 9 per cent as economic slowdown and low consumer sentiments continue to hit demand, prompting industry body SIAM to seek stimulus package for the automobile sector from the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X