For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதா மாதம் சம்பளம் வாங்குறீங்களா... அப்படீன்னா கண்டிஷனா நீங்க ஐடி தாக்கல் செய்தாக வேண்டும்!

Google Oneindia Tamil News

டெல்லி: மாதச் சம்பளதாரர்கள் அத்தனை பேரும் இனிமேல் தவறாமல் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுவரை வருடத்திற்கு ரூ. 5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டுவோர் மட்டுமே தற்போது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதை மாற்றி தற்போது மாதச் சம்பளம் வாங்கும் அத்தனை பேரும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

2 வருடமாக தாக்கல் இல்லை

2 வருடமாக தாக்கல் இல்லை

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் பழைய நடைமுறையின்படி, 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.

இனி தாக்கல் செய்ய வேண்டும்

இனி தாக்கல் செய்ய வேண்டும்

தற்போது இந்த நிலையை மாற்றியுள்ளதால், ரூ. 5 லட்சத்திற்குக் கீழ் வருவாய் ஈட்டுவோரும், இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ஏன் விலக்கு...

ஏன் விலக்கு...

ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் படிவங்களை தாக்கல் செய்வதாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் மூலம் கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

ஆன்லைன் வந்துருச்சே... அதனால் விலக்கு நீக்கம்

ஆன்லைன் வந்துருச்சே... அதனால் விலக்கு நீக்கம்

தற்போது ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது மிகவும் எளிமையாக இருக்கிறது. எனவே, ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்களுக்கான விலக்கு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

எளிதானது... பாதுகாப்பானது

எளிதானது... பாதுகாப்பானது

அவர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் முறை, எளிதானது, பாதுகாப்பானது. அதில் டிஜிட்டல் கையெழுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள், மிகவிரைவாக கையாளப்படும்

ரூ. 5 லட்சத்துக்கு மேல் ஆன்லைன் தாக்கல் கட்டாயம்

ரூ. 5 லட்சத்துக்கு மேல் ஆன்லைன் தாக்கல் கட்டாயம்

5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வதை வருமான வரித்துறை கடந்த மே மாதம் கட்டாயம் ஆக்கியது நினைவிருக்கலாம்.

English summary
Central direct tax board has said it is mandatory to file IT return online, for all monthly salary holders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X