For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நார்வே பெண்ணுக்கு மன்னிப்பு: துபாய் நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

துபாய்: சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நார்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி கேட்டுக் கொண்டதாலும் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம்.

துபாயில் கட்டிட உள் அலக்கார பணியாளராக பணி புரிந்து வருபவர் நார்வேயைச் சேர்ந்த மார்ட்டே டெபோரா ட்டலேவேல் என்ற 42 வயது பெண். இவர் சமீபத்தில் உடன் பணி புரிபவர்களுடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது, சக பணியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் டெபோரா.

அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசாரோ டெபோரா பொது இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக கூறி அவர் மீதே வழக்கை திசை திருப்பியது. அதனைத் தொடர்ந்து, டெபோராவுக்கு 16 மாத சிறைத்தண்டனி விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட தனக்கே தண்டனையா என அதிர்ந்தார் டெபோரோ. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். நார்வே அதிகாரிகளும் இது குறித்த விசாரணையில் இறங்கினர். உலக அளவிலும் டெபோராவிற்கு ஆதரவு பெருகியது.

தற்போது, தடாலடியாக டெபோராவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம். டெபோரா தன்னை மன்னித்து விடுதலை செய்து விடும்படியும், தான் மீண்டும் நார்வேக்கே சென்று விடுவதாகவும் கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது .

English summary
A Norwegian woman at the centre of a sex case in Dubai has been pardoned, her lawyer confirmed to Gulf News.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X