For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்னோடென்னை தூக்கிலிடமாட்டோம்: ரஷியாவிடம் அமெரிக்கா உறுதி

By Mathi
Google Oneindia Tamil News

Snowden
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து தப்பிய ஸ்நோடனை ஒப்படைத்தால் அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க மாட்டோம் என்று ரஷ்யாவிடம் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் உளவு பார்த்தது என்பதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா அவர் மீது தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஸ்னோடென் ஹாங்காங்கில் தஞ்சமடைந்தார்.

பின்னர் ரஷியாவின் விமான நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக தங்கியிருக்கும் அவர் ரஷியாவிடம் அடைக்கலம் கோரினார். ஆனால் அந்நாடோ, இனியும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. இருப்பினும் ஸ்னோடெனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கோரி வருகிறது.

கடந்த 23-ந் தேதியன்று அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், ரஷியாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ஸ்னோடென்னுகு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம் என கூறியுள்ளார்.

English summary
US Attorney general Eric Holder has told the Russian government that the US will not seek the death penalty for former National Security Agency systems analyst Edward Snowden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X