For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்டி இளவரசர் பெயரை வைத்து கம்ப்யூட்டர் வைரஸை பரப்பும் விஷமிகள்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: ஆன்லைனில் இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ் பெயரில் வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயரிட்டுள்ளனர். ராஜ குடும்பத்து வாரிசு பற்றிய செய்தியை படிக்க, புகைப்படங்களை பார்க்க உலக மக்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த ஆவல் எப்படி வினையாக முடிகிறது என்று தெரியுமா? ஃபேஸ்புக்கில் ராஜ குழந்தை பற்றிய வீடியோ குறித்த இணையதள லிங்க் போஸ்ட் செய்யப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால் வீடியோ பிளேயரை அப்டேட் செய்ய கேட்கிறது. நீங்கள் ஓகே பட்டனை கிளிக் செய்தால் வைரஸ் டவுன்லோடு ஆகி அது நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள், வங்கி தொடர்பான தகவல் உள்ளிட்டவைகளை ஸ்கேன் செய்துவிடுகிறது.

அதனால் ராஜ குழந்தை பற்றிய லிங்க் இருந்தால் அதை கிளிக் செய்துவிடாதீர்கள்.

English summary
If you find a link saying exclusive images or video of prince George Alexander Louis, don't click it as it spreads viruses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X