For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானாவை பார்லி.யில் எதிர்ப்போம்: சமாஜ்வாடி அறிவிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பான மசோதாவை பார்லிமென்ட்டில் எதிர்ப்போம் என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா காங்கிரஸ் எம்.பிக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பார்லிமென்ட்டில் தெலுங்கானா மசோதாவை எதிர்ப்போம் என்று காங்கிரஸ் எம்.பிக்களே அறிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது பார்லிமென்ட்டிலும் எதிரொலிக்கும்.

இந்நிலையில் மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சியோ, மாநிலங்கள் பிரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இதனால் பார்லிமென்ட்டில் தெலுங்கானா தொடர்பான மசோதாவை எதிர்ப்போம் என்று அறிவித்துள்லது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Samajwadi Party says it will oppose Telangana in Parliament, says they are not in favour of bifurcating large states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X