For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார் சோகம்: மாசடைந்த நீரை குடித்த 67 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலம், சிதமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் பம்ப்பில் இருந்து நேற்று தண்ணீர் குடித்த 55 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சாப்ராவில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிதமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் பம்ப்பில் இருந்து நேற்று தண்ணீர் குடித்த 55 மாணவிகள் மயக்கமடைந்து விழுந்தனர்.

இந்நிலையில், சாப்ராவில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிதமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் பம்ப்பில் இருந்து நேற்று தண்ணீர் குடித்த 55 மாணவிகள் மயக்கமடைந்து விழுந்தனர்.

அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல், சாப்ராவில் உள்ள மற்றொரு பள்ளியில் நிலத்தடி நீரை குழாய் மூலம் பிடித்து குடித்த மேலும் 12 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம், சாப்ராவில் கடந்த மாதம் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த அதிர்ச்சி நெஞ்சை விட்டு விலகும் முன்னரே மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் பல மாணவர்கள் மயக்கம், வாந்தி ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

23 மாணவர்கள் பலியான பிறகு இதுவரை மாசடைந்த குடிநீரை பருகிய மாணவ - மாணவிகள் பாதிப்புக்குள்ளான 6 சம்பவங்கள் பீகாரில் அரங்கேறியுள்ளன.

English summary
Bihar mid-day meal tragedy that killed over 23 children, contaminated drinking water at government schools have put at least 67 students in hospital in the state, said reports on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X