For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் இன்னும் 20 வருஷத்துக்கு காங்கிரஸ் எழ முடியாது: குமுறும் கிரண்குமார் ரெட்டி

By Mathi
Google Oneindia Tamil News

Kiran Kumar Reddy
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியதால் ஆந்திராவில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் எழவே முடியாது என்று அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கவலை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதை எதிர்த்து எஞ்சிய ஆந்திர பிரதேச எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸின் எதிர்காலமே அங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இது பற்றி கூறுகையில், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு மிகவும் துயரமானது என்பதை மாநில பொறுப்பாளர் திக்விஜய்சிங்கிடம் தெரிவித்துவிட்டேன். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் காங்கிரஸில் பிறந்தவன்.. சாகும்போதும் காங்கிரஸ்காரனாகவே சாவேன்.ஆனால் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு எழவே முடியாது என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாரயணாவும் காங்கிரஸின் முடிவு மிகவும் வலியை உருவாக்கக் கூடியதுதான்.. ஆனால் நான் எந்த பதவியையும் ராஜினாமா செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.

English summary
With Seemandhra ministers strongly opposing the division at the CM's camp office on Thursday night, Kiran Kumar Reddy said at one stage: "The decision is painful. I told Digvijay that the high command's decision had jeopardised the Congress in AP. I was born in the Congress and I will die in the Congress. But in the state the Congress won't recover in the next 20 years."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X